ஹூவாய் மேட் 20 ப்ரோ அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Print lankayarl.com in தொழில் நுட்பம்

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான ஹூவாய், தற்போது ஹூவாய் மேட் 20 ப்ரோ என்ற புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.

அண்மையில் ஹூவாய் நிறுவனம் புதிய ஃபிளாக்ஷ்சிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில், தற்போது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு தொழில்நுட்பத்துடன் ஹூவாய் மேட் 20 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் முப்பரிமாண எமோஜி, ஃபேஸ் அன்லாக் போன்ற வசதிகளும் உள்ளது. மேலும், டாட் புரோஜக்டரும், இன்ப்ரா ரெட் கேமராவும் உள்ளது. இது தவிர வாட்டர் ரெஸிஸ்டண்ட், டஸ்ட் ரெஸிஸ்டண்ட் உள்ளது. அறிமுக சலுகையாக இதன் விலை 69,990 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிராசசர்: Dual NPUs on the HiSilicon Kirin 980
சிம்: டூயல் சிம் கார்டுகள்
ஆண்ட்ராய்டு: ஓரியோ வெர்ஷன் 8.1
டிஸ்ப்ளே அளவு: 6.39 இன்ச், ஃபுல் ஹெச்டி
ரேம்: 6 ஜிபி
கைரேகை சென்சார்
இன்பீல்ட் மெமரி: 128 GB
முன்புற கேமரா: 24 மெகா பிக்சல்
பின்புற கேமரா: 40+20+8 மெகா பிக்சல்
பேட்டரி சக்தி: 4,200 mAh
சார்ஜர்: வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது